புவனகிரியில் எம்பி நேரில் சென்று அஞ்சலி

விசிக மாநாட்டிற்கு சென்று திரும்பிய போது விபத்தில் பலியானவர்களுக்கு எம்பி அஞ்சலி செலுத்தினார்.

Update: 2024-01-29 02:31 GMT

அஞ்சலி

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே வில்லியநல்லூர் சென்று மாநாட்டில் பங்கேற்று வீடு திரும்பும்போது விபத்தில் பலியான கடலூர் மாவட்டத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உத்திரக்குமார், அன்புச்செல்வன், யுவராஜ் ஆகியோரது திரு உடலுக்கு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த எமது இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News