அமைச்சரை மத்தியதொழில் பாதுகாப்புபடையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

கோவையில் அமைச்சரை மத்தியதொழில் பாதுகாப்புபடையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு;

Update: 2024-02-08 16:01 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு இன்று பிற்பகல் கோவை திரும்பினார்.கோவை விமான நிலையத்திலிருந்து மும்பையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர் கிளம்பினார்.விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்ததன் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் செல்லும் பொழுது அவரை மட்டும் உள்ளே அனுமதித்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை.

Advertisement

இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.விமான நிலையத்திற்கு வந்திருந்த திமுக தொண்டர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அமைச்சர் யார் என்று கூறத் தெரியாமல் பாதுகாப்பு பணிக்கு எப்படி வருகிறார்கள் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி விமான நிலையத்திற்கு சென்று உதயநிதி ஸ்டாலினை வழி அனுப்பி வைத்து திரும்பினார்.

Tags:    

Similar News