கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் இளையோர் தொழில்நுட்பக் கலைத் திருவிழா

கே.எஸ்.ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் 14.02.2024 முதல் 17.02.2024 வரை தேசிய அளவிலான இளையோர் தொழில்நுட்பக் கலைத் திருவிழா

Update: 2024-02-12 15:25 GMT

செய்தியாளர் சந்திப்பு 

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் சார்பாக 'ரங்உத்சவ்' தேசிய அளவிலான இளையோர் தொழில்நுட்பக் கலைத் திருவிழா-24 வருகின்ற 2024,பிப்ரவரி 14 முதல் 17 வரை கல்லூரி வளாகத்தில் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர்  ர.சீனிவாசன்  முன்னிலையில் சிறப்பாக டபெற உள்ளது.

இந்நிகழ்வில் தொழில்நுட்பப் பயிலரங்குகள் மற்றும் நடைபெற கண்காட்சி, ஆடை அலங்கார அணிவகுப்பு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், ஓவியம், இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் புத்தொழில் அரங்குகள் (Startups) மற்றும் கண்காட்சி ஆகியவை பகல்நேர நிகழ்ச்சிகளாகவும்,

மாலை நேரம் பார்வையாளர்களைக் கவரும் வகையில் கண்கவர் நிகழ்ச்சிகளாக ஆடல், பாடல் போன்றவை நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில் தேசிய அளவிளான தொழில்நுட்ப வல்லுநர்கள், 25க்கும் மேற்பட்ட திரை உலக நட்சத்திரங்கள், பாடகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெறும் பங்கேற்பாளர்களுக்கு ரூபாய் இருபது இலட்சம் வரையிலான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கலைப்பொருட்கள் விற்பனையகம், உணவுத் திருவிழா மற்றும் அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சி என 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. 4 நாட்கள் நடைபெறும் மாபெரும் தேசிய இளையோர் தொழில்நுட்பக் கலைத் திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களை சார்ந்த 15,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர் என்றும்,

கலந்து கொள்ளும் அனைவருக்கும் தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்றும் கே.எஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அலுவலர் முனைவர் அகிலா முத்துராமலிங்கம், மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News