ஜல்லிக்கட்டு போட்டி

எருமப்பட்டி அருகே உள்ள சாலபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.;

Update: 2024-03-02 15:15 GMT

எருமப்பட்டி அருகே உள்ள சாலபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. 

எருமப்பட்டி மார்ச் 3 எருமப்பட்டி அருகே உள்ள ரெட்டிப்பட்டி ஊராட்சி சாலபாளையத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆர்டிஓ பார்த்திபன் தலைமை வகித்தார் சட்டமன்ற உறுப்பினர் சேகர் நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் ராஜசேகரன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் போட்டியை துவக்கி வைத்தார்.

இதில் நாமக்கல் சேலம் ஈரோடு திருச்சி திண்டுக்கல் மதுரை மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 520 மாடுகள் கொண்டுவரப்பட்டன அவற்றில் மொத்தம் 508 மாடுகள் போட்டியில் பங்கேற்றனர் மாடுபிடி வீரர்கள் 350 பேர் கலந்து கொண்டனர் அவர்களின் 50 பேர் வீதம் ஒவ்வொரு குழுக்களாக மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர் விழாவானது காலை 8:30 மணிக்கு துவங்கப்பட்டு 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது இதில் மாடுபிடி வீரர்களுக்கும் பிடிப்பிடாத மாடு உரிமையாளர்களுக்கும் ரொக்க பணம் போவனி டேபிள் புடவை வேட்டி சைக்கிள் உள்ளிட்டா பல்வேறு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன மாடு முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர்.

Advertisement

அவற்றின் மேல் சிகிச்சைக்காக நான்கு பேர் அரசு மருத்துவமனையிலும் ஒரு நபர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நல்லசாமி வயது 29 என்பவர் தனியார் மருத்துவமனையிலும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மின்னல் ராஜா வயது 21 திருச்சி மாவட்டம் லால்குடி சேர்ந்த சுந்தர் வயது 28 எருமப்பட்டி அருகே உள்ள பொன்னேரியை சேர்ந்த விக்னேஷ் வயது 27 ராசிபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி வனிதா வயது 25 ஆகிய நான்கு பேர்களும் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ் மணி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை சால பாளையம் ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்

Tags:    

Similar News