ஆத்தூர் : குஷ்புவை கண்டித்து திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்

ஆத்தூர் மணிக்கூண்டு அருகில் குஷ்புவை கண்டித்து உருவப்படம் எரித்தும் திமுக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2024-03-14 05:47 GMT

ஆத்தூர் மணிக்கூண்டு அருகில் குஷ்புவை கண்டித்து உருவப்படம் எரித்தும் திமுக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்


தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சைக்காசு கொடுத்தால் திமுகவிற்கு வாக்களிப்பார்கள் என மிகவும் மோசமான முறையில் விமர்சித்த நடிகையும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூவை கண்டித்து திமுக மகளிர் அணியினர் தமிழகம் முழுவதும் குஷ்பூ உருவப்படம் எரித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் மணிக்கூண்டு முன்பு திமுக நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா தலைமையிலான திமுக மகளிர் அணி சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குஷ்பூவின் புகைப்படத்தை எரித்த அவர்கள் குஷ்பூவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் முழக்கமிட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மகளிர் அணி பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News