புதூர் நாடு மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அவதி

புதூர் நாடு மலைப்பகுதியில் பகுதியில் போதுமான சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளகி வருகின்றனர்.;

Update: 2024-03-17 10:45 GMT

பழுதடைந்த சாலை

 திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதூர்நாடு மலைப்பகுதியில் உள்ள புலியூர் பகுதியில் சுமார் 350 குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் சரியான சாலைவசதி இல்லாமல் சாலைமுழுவதும் குண்டு குழியுமாக உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடிய நபர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நோயாளிகள்,கர்ப்பிணி பெண்கள், பால் ஏற்றி செல்லும் பால்வண்டி ,

மற்றும் மலைப்பகுதியில் விளையக்கூடிய காய்கறிகள் உள்ளிட்டவை எடுத்து செல்வதற்கு போதுமான சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் , மேலும் பிரசவத்திற்கும் செல்லும் பொழுது 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் ஆகுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்மேலும் சுதந்திரம்

Advertisement

அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் இந்த மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாள் மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இந்த மலைவாள் மக்களுக்கு தேவையான அடிப்படை சாலை வசதியை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதா இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாவது மட்டுமல்லாமல் விபத்து ஏற்பட்டு வருகிறதுஇந்த நிலையில் இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக உள்ள திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நல்லதம்பி ஓட்டு கேட்கும் பொழுது மட்டும் பொதுமக்களை வந்து,

பார்ப்பதாகவும் அதன்பின் இதுவரை தங்களுடைய பகுதிக்கு வந்து தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

Tags:    

Similar News