மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை
சேலத்தில் மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-03-24 07:33 GMT
தற்கொலை
சேலம் கருப்பூர் சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சித்தையன் வயது (57), இவர் சேலம் மாமாங்கம் பகுதியிலுள்ள ஒரு ரெடிமிக்ஸ் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி இறந்து விட்டதால் சித்தையன் மன உளைச்சலில் இருந்தார். மேலும் சாமிநாயக்க ன்பட்டியில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்த அவர் விஷ மாத்திரையை தின்று நேற்று முன்தினம் வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.