கிரஷர் தொழிலாளி பலி
புதுக்கோட்டை மாவட்டம், திருமலைராயசமுத்திரம் பகுதியில் கிரஷர் இயந்திரம் சரிசெய்யும் பணியின் போது தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-03-31 06:37 GMT
இலுப்பூர் தாலுகா, திருமலைராய சமுத்திரத்தை சேர்ந்தவர் சண்முகசந்தரம் (48). நம ணசமுத்திரத்தில் தங்கி செட்டியாபட்டியில் உள்ள கல் உடைக்கும் கிரஷரில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கிரஷர் இயந்திரம் பழுதாகவே அதன்மீது ஏறி சண்முகசுந்தரம் சரிசெய்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் புதுகை அரசு மருத்து வக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.