புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

திருச்சியில் இருந்து சென்னை, மதுரை, கோவைக்கு 15 புதிய பஸ்கள் சேவைகள் துவங்கியது.

Update: 2024-07-20 05:50 GMT
தமிழகத்தின் மையப் பகுதியாக திருச்சி விளங்கி வருகிறது. இங்கிருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். சில நேரங்களில் அவர்களுக்கு போதிய பஸ் வசதி கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு 90 புதிய பேருந்துகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார். அதன்படி திருச்சியில் இருந்து சென்னை, கோயம்புத்தூர் , மதுரை, ராமநாதபுரம், கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 15 புதிய பி.எஸ். -6 ரக பேருந்துகள் துவக்க விழா இன்று(20-07-2024) நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 15 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், கோட்ட மேலாண் இயக்குநர் மகேந்திரகுமார், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, கிழக்கு மாநகர செயலாளரும், மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன், மண்டல குழு தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News