சத்தி அருகே இரவில் பைக் மரத்தில் மோதியதில் மாவோயிஸ்ட் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் பலி
சத்தி அருகே இரவில் பைக் மரத்தில் மோதியதில் மாவோயிஸ்ட் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் பலி
சத்தி அருகே இரவில் பைக் மரத்தில் மோதியதில் மாவோயிஸ்ட் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் பலி சத்தி - பண்ணாரி ரோட்டில் மரத்தில் பைக் மோதி போலீஸ்காரர் பலி, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தி அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் குமார் (43), இவர் மாவோயிஸ்ட் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு குமார் தனது பைக்கில் வடவள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது சத்தி - பண்ணாரி ரோட்டில் எதிர்பாராத விதமாக அவர் ஓட்டி சென்ற பைக் ரோட்டோரமாக உள்ள மரத்தில் மோதி விபத்திற்குள்ளனது. இதில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரவில் நடந்த இந்த விபத்து யாருக்கும் தெரியவில்லை நேற்று காலை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து நடந்திருப்பது குறித்து சத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் ஊர்வலமாக சத்தியில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு வரபட்டது. அங்கு அவர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஈரோடு மாவட்ட எஸ்.பி ஜவகர், மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி டாக்டர் சசி மோகன் சத்தி பொறுப்பு டிஎஸ்பி தங்கவேல், இன்ஸ்பெக்டர் செல்வராஜ், உட்பட ஏராளமான போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்கள் . விபத்தில் உயிரிழந்த குமாருக்கு பவித்ரா (40) என்ற மனைவியும், மகன் லலித் கிஷோர் (20) தனியார் கல்லூரியில் பி. இ 2ம் ஆண்டும், பூபேஷ் (12) தனியார் பள்ளியில் 7ம் வகுப்பும் படித்து வருகின்றனர். விபத்து குறித்து சத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.