கொல்லிமலையில் விவசாயிகளுக்கு பணப்பயிர் விழிப்புணர்வு கருத்தரங்கு!

கொல்லிமலை பகுதியில் ஸ்பைசஸ் போர்டு (Spices Board) நறுமண வாரியத்தின் மூலமாக கொல்லிமலையில் உள்ள விவசாய சங்கங்களில் உள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு சோளக்காடு பகுதியில் உள்ள வேளாண்மை வணிக வளாகத்தில் நடைபெற்றது.

Update: 2024-07-20 13:58 GMT
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை மூலிகை வளம் நிறைந்த மலைப்பகுதி. கொல்லிமலையில் விளையும் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இயற்கை உரங்களை பயன்படுத்துவது இதற்கு முக்கிய காரணமாகும். கொல்லிமலை பகுதியில் ஸ்பைசஸ் போர்டு (Spices Board) நறுமண வாரியத்தின் மூலமாக கொல்லிமலையில் உள்ள விவசாய சங்கங்களில் உள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு சோளக்காடு பகுதியில் உள்ள வேளாண்மை வணிக வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஏலக்காய், காபி, மிளகு, மற்றும் நறுமண பொருட்கள் பயிரிடுவது மேலும் நோய்கள் தடுப்பது பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சியில் அதன் வாரியத்தின் தலைவர் கனக திலீபன் தலைமை தாங்கினார், இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கே.பி.ஜெகதீசன் மற்றும் சங்கத் தலைவர் சின்னையன் மற்றும் அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Similar News