கடமலைக்குண்டு அருகே டூ வீலரில் சென்றபோது சுவற்றில் மோதி இளைஞர் பலி
கார்த்திக் (27)இவரும் இதே கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் 18, என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் 27, டிரைவர், இவரும் இதே கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் 18, என்பவரும் இருசக்கர வாகனத்தில் செங்குளம் நோக்கி சென்றனர். இரு சக்கர வாகனத்தை கார்த்திக் ஓட்டிச்சென்றார். இந்நிலையில் ஓட்டணை அருகே சென்ற போது கட்டுப்பாடு இழந்த இருசக்கர வாகனம் ரோட்டின் ஓரத்தில் இருந்த வீட்டின் சுவரில் மோதியது. பலத்த காயம் அடைந்த கார்த்திக், பின்னால் அமர்ந்து வந்த ஈஸ்வரன் ஆகியோரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே கார்த்திக் இறந்தார். ஈஸ்வரன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.