திருமணிமுத்தாற்றில் தூர்வாரும் பணி

நேற்று முதல் தொடங்கியது

Update: 2024-07-21 03:18 GMT
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த திருமணிமுத்தாற்றுக்குள் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். குறிப்பாக காய்கறி மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டும் இடமாக மாறி வருவதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்கு கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் திருமணிமுத்தாற்றில் செடி, கொடிகள் அடர்த்தியாக வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டன. எனவே திருமணிமுத்தாற்றை தூர்வாருவதுடன் குப்பைகள் கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். திருமணிமுத்தாற்றை தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் திருமணிமுத்தாற்றில் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. அதாவது ஆற்றின் இருபுறங்களிலும் இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன. மேலும் அங்கிருந்த குப்பைகளும் அகற்றப்பட்டு வருகிறது. திருமணிமுத்தாற்றை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News