வால்பாறையில் வனத்துறையினர் பராமரிக்கப்பட்டு வந்த புலியை சென்னை வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர்..
பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேலும் செலவு செய்து வனத்துறையினர் பராமரிக்கப்பட்டு வந்த புலிக்கு வேட்டையாட தெரியாததால் புலியை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர்..
பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேலும் செலவு செய்து வனத்துறையினர் பராமரிக்கப்பட்டு வந்த புலிக்கு வேட்டையாட தெரியாததால் புலியை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.. பொள்ளாச்சி..ஜூலை..23 பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் கடந்த 2020.ம் ஆண்டு தேயிலை தோட்டத்தில் காயங்களுடன் இருந்த எட்டு மாத புலிக்குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.. இந்த புலிக்குட்டிக்கு முள்ளம்பன்றியின் முட்களால் உடல் முழுவதும் காயம் அடைந்து இருந்த நிலையில் ரொட்டிக்கடை பகுதியில் உள்ள விலங்குகள் மீட்பு மையத்தில் வைக்கப்பட்டு வனத்துறையினர் பராமரிக்கப்பட்டு வந்தனர். பின்பு இதனைத் தொடர்ந்து மானாம்பள்ளி பகுதியில் உள்ள கூண்டில் அடைத்து வைத்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் எட்டு மாதத்தில் தாயை விட்டு பிரிந்ததால் தனக்கு வேட்டையாட தெரியாத நிலையில் இருந்த புலிக்கு வேட்டையாடும் பயிற்சியை அளிக்கும் விதமாக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மானாம்பள்ளி மந்திரி மட்டம் வனப்பகுதியில் சுமார் 70 லட்சம் செலவில் 10,000 சதுர அடி கொண்ட பிரம்மாண்ட கூண்டு ஒன்று அமைக்கப்பட்டு புலியை அந்த கூண்டிற்கு மாற்றப்பட்டு இயற்கை சூழலில் புலிக்குட்டி வளர்க்கபட்டது. மேலும் புலிக்குட்டி இருக்கும் பத்தாயிரம் சதுர அடி கூண்டில் முயல், மான் போன்ற விலங்குகள் விடப்பட்டு வேட்டையாட பயிற்சியும் அளிக்கப்பட்டு கூண்டு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வனத்துறையினர் தொடர்ந்து 24 மணி நேரமும் புலிக்குட்டியை கண்காணித்து வந்தனர்.. இந்நிலையில் இந்த T 56 புலி குட்டியால் வனத்தின் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள முடியுமா என்பது குறித்து ஆராய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அந்த குழுவினர் புலிக்குட்டியால் வனப்பகுதியில் தன்னால் சுயமாக வேட்டையாடி வளர இயலாது எனவும் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அந்த புலிக்குட்டியினை சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றுவதற்கு அந்த கமிட்டி செய்யப்பட்டிருந்த நிலையில், இதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மேற்கொண்டு வந்தனர்.. இந்நிலையில் புலிக்குட்டியை வனப்பகுதிக்குள் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுமார் ஒரு கோடி ரூபாயக்கும் அதிகமாக வனத்துறையினர் செலவு செய்த நிலையில் அந்த முயற்சி முழுவதும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனால் தற்போது 4 வயதாகும் இந்த ANM - T56 புலியை வால்பாறையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு வாகனத்தின் மூலம் சென்னை அறிஞர் அண்ணா பூங்காவிற்கு வனத்துறையினர் கொண்டு செல்லப்பட்டனர்.. ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649.,