ஆத்தூர் : அதிமுக வினர் மின் மீட்டர் படம் பேனரை பாடை கட்டி எடுத்துச் சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு
ஆத்தூர் ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் மின்சார மீட்டர் பேனருக்கு பாடை கட்டி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்.
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வை செய்த தமிழக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக சார்பில் நடைபெற்று வரும் நிலையில் ஆத்தூர் ராணிப்பேட்டை எம்ஜிஆர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு பகுதியில் இருந்து வருகை புரிந்த அதிமுக தொண்டர்கள் மின்கட்டண உயர்வை கண்டிக்கும் வகையில் மின்சார மீட்டர் பேனர் படத்தை பாடை கட்டி பேருந்து நிலையப் பகுதியிலிருந்து ஊர்வலமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் ராணிப்பேட்டை திடல் வரை நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு திமுக அரசு பதவி விலக வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.