நிதி வழங்கிய சுற்றுலாத்துறை அமைச்சர்
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர்
பந்தலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கவியரசன் என்ற இளைஞர் உடல் மூன்று நாட்களுக்குப் பிறகு நேற்று மீட்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் உயிரிழந்த கவியரசன் குடும்பத்திற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் நேரில் சென்று ஆறுதல் கூறி, முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்ச ரூபாய் நிதியை வழங்கினர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களாக வரலாறு காணாத கனமழையால் மாவட்டத்திலுள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதே போல் பந்தலூர் அருகே உள்ள பொன்னானி ஆற்றல் மீன் பிடிக்கச் சென்ற கவியரசன் மற்றும் குணசேகரன் ஆகிய இருவர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கடந்த 20ம் தேதி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ,இருபதாம் தேதி மாலை குணசேகரன் உடல் மீட்கப்பட்டது, ஆனால் கவியரசன் உடல் ஆற்றில் அடிச்செல்லப்பட்டதால் நேற்று மாலை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் கவியரசன் உடலை மீட்டனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரு சிறுவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறுவரின் குடும்பங்களுக்கு தல மூன்று லட்ச ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டார். அதன்படி கடந்த 21ஆம் தேதி குணசேகரன் குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபாயும், திமுக சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதியை திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.இராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று வழங்கிய நிலையில், இரண்டாவதாக நேற்று சடலமாக மீட்கப்பட்ட கவியரசன் குடும்பத்திற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறி முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்ச ரூபாயை வழங்கினார். இதேபோல் திமுக சார்பிலும் ஒரு லட்ச ருபாய் வழங்கப்பட்டது. இதனிடையே தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் ஆற்றோரும் செல்லக்கூடாது என சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் மரத்தின் கீழ் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தினர். இந்த நிகழ்வில் முன்னாள் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி ,மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ், ராஜேந்திரன். ஒன்றிய செயலாளர் சுஜோஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர். பேட்டி கா. ராமச்சந்திரன் ( சுற்றுலாத்துறை அமைச்சர்)