ராமநாதபுரம் ஊராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமைத்திட மாவட்ட ஆட்சியர் மனு

பட்டணம் காத்தான் முதல் நிலை ஊராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மருது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை

Update: 2024-07-24 03:09 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பட்டணங்கத்தான் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மருது மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆர் ஜி மருது பாண்டியன் ஆகியோர்கள் ராமநாதபுரம் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜித் சிங், சந்தித்து மலர் கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்றனர் அதன் பின்பு பட்டினத்தார் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மருது ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார் அதில் பட்டண காத்தான் முதல் நிலை ஊராட்சி அதிக மக்கள் தொகை உள்ள ஊராட்சி பகுதியாகும் இங்கு ராமநாதபுரம் நகராட்சி பட்டணம் காத்தான் ஊராட்சி ஆகிய பகுதிகளை இணைக்க கூடிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு பொதுமக்கள் ஆளாகி வரும் நிலை உள்ளது இது குறித்து பலமுறை அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளோம் தற்போது பட்டணம் காத்தான் ஊராட்சி பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்தால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் மிகுந்த சிரமத்தை போக்க முடியும் இதை விரைவில் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

Similar News