நிப்பா வைரஸ் பரவல் எதிரொலி
வெளியிட்டார் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு
நிபா வைரஸ் பரவும் விதம் நோயின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாக செய்தி குறிப்பை வெளியிட்டார் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு....... கேரளா மாநிலம் மலப்புரத்தில் நிஃபா வைரஸ் காரணமாக 13 வயது சிறுவன் பலியான நிலையில் மலப்புரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நிபா வைரஸ் பரவும் விதம் நோயின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாக செய்தி குறிப்பை வெளியிட்டார் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இந்த செய்தி குறிப்பில் நிபா வைரஸ் பரவும் விதம் நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வௌவால் மற்றும் பன்றி ஆகியவற்றின் சிறுநீர், எச்சில் மற்றும் இதர திரவங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சளி, உமிழ் நீர் மற்றும் வியர்வை மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. பழந்தின்னி வௌவால்கள் கடித்த பழங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது. நிபா வைரஸ் நோயின் அறிகுறிகள்: கடுமையான காய்ச்சல், தலைவலி, மயக்கம் சுயநினைவிழத்தல், மனக்குழப்பம், கோமா, ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும். கிருமி தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் வெளிப்படும். மேலும் அறிகுறிகள் தென்பட்ட 24 மணி முதல் 48 மணி நேரத்திற்குள் தீவிர மயக்க நிலை, சுய நினைவிழத்தல் மற்றும் மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிபா வைரஸ் நோயினை தடுக்கும்முறைகள் விலங்குகள் கடித்த பழங்கள் காய்கறிகளை உபயோகப்படுத்த கூடாது. காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். இறந்த வௌவால்கள், பன்றிகள் இதர விலங்குளை தொடுவதை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்த வேண்டும். பொது இடங்களுக்கு சென்று வரும் போது சோப்பினால் கை கழுவுவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். தேவையின்றி காடுகள் மற்றும் குகை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அருகாமையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மேலும் 1077 என்ற தொலைபேசி எண்ணிலும், dphnlg@nic.in என்ற Mail ID-க்கு தகவல் தெரிவிக்குமாறு செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டது.