பாஜக அரசை கண்டித்து காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம்!
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக குற்றம்சாட்டி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டையும்- மக்களையும் புறக்கணித்ததாக குற்றம்சாட்டி பாஜக அரசை கண்டித்து காதில் பூ சுற்றியும், கோவிந்தா கோவிந்தா என பாட்டுப்பாடியும் அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலக நுழைவாயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்காமல்,கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல்,ரயில்வே துறை சார்ந்த தமிழ்நாட்டுக்கான திட்டங்களை அறிவிக்காமல் தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் புறக்கணித்து இருப்பதாக கண்டன முழக்கம் எழுப்பபட்டன.பதாகைகளாகவும்,பேனர்களாகவும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவர்கள் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோவிந்தா கோவிந்தா தமிழ்நாட்டுக்கு கோவிந்தா என பாட்டு பாடி கண்டனங்களை தெரிவித்தனர்.