மக்களோடு மக்களாக வரிசையில் நின்று இரத்த அழுத்த பரிசோதனை செய்துகொண்ட கலெக்டர்

மருத்துவ முகாம்

Update: 2024-07-24 09:46 GMT
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்புலியூர் ஊராட்சியில் மேலப்புலியூர் லாடபுரம் மற்றும் களரம்பட்டி ஊராட்சி மக்களுக்காக நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த முகாமில் பொதுமக்களின் மருத்துவ பரிசோதனைக்காக அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று இரத்த அழுத்த பரிசோதனை செய்துகொண்டார்.

Similar News