பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் குழந்தைகளுடன் அமர்ந்து பெண் தர்ண போராட்டம்
பொள்ளாச்சி பகுதியில் சொத்தை விற்க மனைவி தடை மனு கொடுத்தும் அதை விசாரிக்காமல் சொத்தை விற்க பத்திரப்பதிவு செய்து கொடுத்த பொள்ளாச்சி சார் பதிவாளர் செல்வகுமாரை கண்டித்து அலுவலகத்துக்குள் குழந்தைகளுடன் அமர்ந்து பெண் தர்ண போராட்டம்..
பொள்ளாச்சி பகுதியில் சொத்தை விற்க மனைவி தடை மனு கொடுத்தும் அதை விசாரிக்காமல் சொத்தை விற்க பத்திரப்பதிவு செய்து கொடுத்த பொள்ளாச்சி சார் பதிவாளர் செல்வகுமாரை கண்டித்து அலுவலகத்துக்குள் குழந்தைகளுடன் அமர்ந்து பெண் தருண போராட்டம் - என்னங்க சார் உங்க சட்டம் என கேள்வி பாதிக்கப்பட்ட பெண் கேட்டதால் சார்பதிவாளர் பதில் கூற முடியாமல் திணரல். பொள்ளாச்சி..ஜூலை..24 பொள்ளாச்சி ஆர்.பொன்னாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் சத்யவாணி - சுரேஷ் தம்பதியினர்.. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர் இந்நிலையில் சமீப காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.. இதனால் இவர்கள் வசிக்கும் வீட்டை விற்க கணவன் சுரேஷ் முயற்சி செய்து வந்ததை அறிந்த மனைவி சத்தியவாணி சார் பதிவாளர் அலுவலகத்தில் சொத்தை விற்க தடங்கல் மனுவை கடந்த ஒன்பதாம் தேதி அளித்திருந்தார்.. ஆனால் சார்பதிவாளர் அந்த மனுவை விசாரிக்காமல் தன் கணவனுக்கு சாதகமாக கடந்த 12.ஆம் தேதி வேறு ஒரு நபருக்கு சொத்தை கிரையம் செய்து கொடுத்துள்ளார்.. இதை அறிந்த மனைவி சத்தியவாணி தனது இரு குழந்தைகளுடன் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் செல்வகுமார் மேசை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.. மேலும் சார்பதிவாளரிடம் சரமாரியக கேள்வி எழுப்பி என்னங்க சார் உங்க சட்டம் என பாதிக்கப்பட்ட பெண் கேட்டதால் சார்பதிவாளர் பதில் கூற முடியாமல் விழிபிங்கி திணரினார் பின்பு சொத்து கிரையம் செய்ததை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தன் அடிப்படையில் கணவன் சுரேஷிடம் அசல் பத்திரத்தை கொண்டு வர சொல்லி சார் பதிவாளர் கூறியுள்ளார்.. மேலும் சார் பதிவாளர் கூறுகையில் இந்த விவகாரம் தொடர்பாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்று சார்பதிவாளர் செல்வகுமார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கூறியுள்ளார்.. ஆனால் எனக்கு நியாயம் கிடைக்காமல் இப்பகுதியை விட்ட நகரம் மாட்டேன் என அந்தப் பெண் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது பின்பு அங்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையை போலீசார் மற்றும் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றார். பேட்டி - சத்தியவாணி.. ஆர். பொண்ணபுரம்..பாதிக்கப்பட்டவர். ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649.,