ராமநாதபுரம்புனித சந்தியாகப்பர் தேர் பவனி திருவிழா நடைபெற்றது

ராமேஸ்வரம் வேர்காடு புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 482 ஆம் ஆண்டு தேர்பவனி திருவிழா ஜாதி மத வேறுபாடு இன்றி மும்மதத்தினரும் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்

Update: 2024-07-25 02:39 GMT
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் வேர்காடு புனித சந்தியாகப்பர் ஆலைய 482 ம் ஆண்டு திருவிழா கடந்த ஜூலை 16ம் தேதி மதியம் கொடிமர ஏற்றமும் மாலை 5.30 மணி அளவில் கொடியேற்றமும் நடைபெற்றதை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு ஜெபமாலை நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி திருவிழா ஜூலை 24ம் தேதி இன்று இரவு 8.30 மணி அளவில் சந்தியாகப்பர் வேளாங்கண்ணி மாதா ஆகியோர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்து பக்த்தர்களுக்கு அருள் பாலித்தார் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு சந்தியாகப்பரை வழிபட்டனர் இவ்விழாவின் முக்கிய சிறப்பு அம்சமாக ஜாதி மத வேறுபாடு இன்றி இராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள மும் மதத்தை சேர்த்த பொது மக்கள் தங்கள் குடும்பதோடு கலந்து கொண்டு வழிபாடு நடத்தியது குறிப்பிடதக்கது

Similar News