ஆத்தூர்: சந்து கடையில் அரசு மதுபாட்டில் அமோக விற்பனை

Update: 2024-07-25 04:48 GMT
சேலம் மாவட்டம் வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை காலை 5 மணி முதல் நடைபெறுகிறது. குறிப்பாக, வாழப்பாடி பேரூராட்சியில் மயானம் அருகே,அரசு மதுபான கடை முன்பு, அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, குறிச்சி, சோமம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திறந்த வெளியிலும், ஸ்கூட்டியில் வைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. பாட்டிலுக்கு ரகத்தை பொறுத்து 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றனர். இதனால் காலையிலேயே குடிமகன்கள் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல், தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை முதலே மது விற்பனை நடைபெறுவதால் வாழப்பாடியில் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. இதுகுறித்து புகார் கொடுத்தாலும், போலீசார் மாமுல் வாங்குவதால், நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News