சத்தியில் சாலையோரம் மலை போல் குவியும் கட்டிட கழிவுகள்
சத்தியில் சாலையோரம் மலை போல் குவியும் கட்டிட கழிவுகள்
சத்தியில் சாலையோரம் மலை போல் குவியும் கட்டிட கழிவுகள் சசத்தியில் நீர் வழிப்பாதையில் மலை போல் குவிக்கப்பட்டு வரும் கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தியில் இருந்து கோவை செல்லும் ரோட்டின் இருபுறமும் மழை நீர் செல்லும் நீர் வழிப்பாதை உள்ளது. மழை காலங்களில் மழை நீர் இந்த வழியாக சென்று பவானி ஆற்றில் கலக்கும். தற்போது இந்த இடங்களில் கட்டிட கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. நகரின் பல்வேறு பகுதியில் நடக்கும் கட்டிட பணிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் இப்பகுதியில் மலை போல் குவிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் கட்டிட கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்ட போதும் பல பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் கழிவுகள் மொத்தமாக கொட்டப்பட்டு, குவிக்கப்படுகிறது. காற்று அதிகம் வீசும் போது, கட்டிட கழிவுகளில் இருந்து தூசிகள் பறந்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் படர்ந்து வருகிறது. மேலும் பைக்கில் செல்வோர் கண்களில் விழுவதால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. ஒரே இடத்தில் கழிவுகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது. கட்டிட கழிவுகளை எடுத்து வருவோர் அதை ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு பயன்படுத்தலாமே தவிர நீர் வழிப்பாதையில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே மலை போல் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.