ஆத்தூர் : மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆத்தூர் மின்வாரிய அலுவலகம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் கண்ணில் கருப்பு துணி கட்டியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2024-07-25 07:46 GMT
தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்திய ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்கிட கோரியும் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன், சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில், மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கண்களில் கரும்பு துணி கட்டியும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, மின் கட்டணம் உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும் ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும். தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா பெற்று தராத மத்திய மாநில அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் இளங்கோவன் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறை உயர்த்தியுள்ளது. சேலம், ஆத்தூர் பகுதியில் புதிதாக வீடுகளுக்கு மின் இணைப்புகள் கேட்டு பல மாதங்கள் காத்து இருக்கின்றனர். சேலம் மாவட்டத்தை ஆண்டாக பிரித்து பார்க்க கொண்டு மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை திறக்க வேண்டும். ஆத்தூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள 230 கே.வி.ஏ., புதிய துணை மின் நிலையம் பணிகளை துவக்க வேண்டும். காவிரி நீரை தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசுக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றுள்ளதாக கூறுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் இதில், மாநில தொண்டரணி செயலாளர் சாகுல் ஹமீது, ஆத்தூர் நகரச் செயலாளர் இன்பவேல், ஒன்றிய செயலாளர் பச்சமுத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News