பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 24). இவர் தனது பிறந்தநாளையொட்டி தனது நண்பர்கள் 7 பேருடன் பெரம்பலூரில் இருந்து கடலூர் மாவட்டம் வேப்பூருக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். இதேபோல் மதுராந்த கத்தை சேர்ந்த கணேசன் (32) என்பவர் செங்கல்பட்டில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள தேவையூர் பிரிவு சாலையில் சென்றபோது 2 கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் சென்ற 8 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த 8 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றிமோகன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இந்தவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்