ராமநாதபுரம் ஆடித் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது

தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

Update: 2024-07-25 09:35 GMT
ராமநாதபுரம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை கண்மாய்கரை குடியிருப்பு காள சித்தி வினாயகர், முத்துமாரியம்மன், கருமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா கடந்த 15 தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் இரவில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் கும்மி கொட்டுதல் நிகழ்வும் நடைபெற்றது. நேற்று முன்தினம் பால் குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். நேற்று வடமாடுமஞ்சுவிரட்டு நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டன. ஒவ்வொரு சுற்றும் 20 நிமிடங்கள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாடுகளுக்கும், மாடுகளை அடக்கிய வெற்றி பெற்ற வீரர்களுக்கும் ரொக்க பரிசும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. நேரு யுவகேந்திரா இளைஞர் மன்றம், மகளீர் மன்றம்,கண்மாய் கரை குடியிருப்பு பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Similar News