பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் உள்ள காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் 12 ராசிகளுக்கு 12 தூண்களில் 12 குபேர பெருமாள் வீற்றிருப்பது தனிச்சிறப்பாகும். இக்கோவிலில் குபேர பூஜை நேற்று நடைபெற்றது. சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்