பொள்ளாச்சி திசா வாழ்வியல் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மாணவர்களுடன் கலந்துரையாடல்..
மாணவ செல்வங்களே தாய் தந்தை மட்டும் அல்ல அனைவரையும் மதிக்க கற்று கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு உயரும். பொள்ளாச்சியில் மாணவர்களிடையே உரையாடிய முன்னாள் காவல்துறை தலைவர்.
மாணவ செல்வங்களே தாய் தந்தை மட்டும் அல்ல அனைவரையும் மதிக்க கற்று கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு உயரும். பொள்ளாச்சியில் மாணவர்களிடையே உரையாடிய முன்னாள் காவல்துறை தலைவர். பொள்ளாச்சி - ஜூலை - 26 பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விருந்தினராக வந்த தமிழக முன்னாள் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கு பெற்றார். அப்போது மாணவர்களிடம் பேசிய அவர் இன்று ஒரு வரலாற்று நாள் உங்களுக்கு நினைவிருக்கிறதா., நிலவில் மனிதன் முதல் முதலில் கால் பதித்த நாள் இன்று. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன். மாணவர்களே இங்கு சிலர் கூறுவர் பெற்றோரையும் உங்கள் ஆசிரியர்களையும் மதியுங்கள் என்பார்கள் அவர்களை மட்டும் அல்ல குழந்தை செல்வங்களே அடிப்படை மரியாதை என்பதை அனைவருக்கும் கொடுத்து பழகுங்கள் மனிதர்களோடு மட்டும் அல்ல அனைத்து உயிர்களிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள் உங்கள் வாழ்வு மேம்படும் மகிழ்வோடு இருக்க பழகுங்கள் இந்த உலகில் ஒவ்வொரு நொடியும் பல்லாயிரம் பேர் உயிர் இழக்கிறார்கள்., பலர் நோயால் அவதிப்படுகிறார்கள் ஆனால் இன்று நாம் நலமுடன் உள்ளோம் என்பதே நமக்கு கடவுள் கொடுத்த வரம் எனவே மகிழ்வோடு இருங்கள். உங்களது மனதை உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி முனைப்போடு போராடுங்கள் இன்று உடல் நல குறைவுடன் எவ்வளோ நபர்கள் சாதனைகளை படைத்து வருகின்றனர். உங்களது மன உறுதியை இழக்காதீர்கள். குனிந்து உங்கள் கால்களை பார்க்காதீர்கள் நிமிர்ந்து நட்சரங்களை பாருங்கள் நமக்கும் அவைகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு, உங்கள் பெற்றோரிடம் கேள்விகளை கேளுங்கள் ஏன் - எப்படி - எதற்கு எனும் மூன்று மந்திரங்களை கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் கிடைக்கும் பதில்கள் தான் உங்கள் எதிர்காலம் என்று மாணவ மாணவிகளுக்கு பல அறிவுரைகளை வழங்கினார். மேலும் தான் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி ஊக்குவித்தார். ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649.,