நாமக்கல் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

வாராஹி கோவிலில் ஆடி மாத விழாவை முன்னிட்டு, உலக நன்மைக்காகவும், சுமங்கலியாக இருக்கவும், மழை வேண்டியும், திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது.இந்த திருவிளக்கு பூஜையை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

Update: 2024-07-26 16:46 GMT
நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை எம்.ஜி.ஆர். நகரில் தங்காயி மற்றும் ஸ்ரீ மகா வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பத்து வருடங்களாக வருடந்தோறும் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் ஆடி நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு விழா, கடந்த 20-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாமக்கல் ஸ்ரீ தங்காயி அம்மன் மற்றும் ஸ்ரீ மகா வாராஹி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் பதினொன்றாம் ஆண்டாக கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் நவராத்திரி திருவிழா ஆரம்பம் ஆனது, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை இலட்சார்னை நடைப்பெற்றது. நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான வியாழக்கிழமை தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ.மாதாஜி தலைமையில் ஹோமம் மற்றும் ஸஹஸ்ரநாமம் , நவாவர்ணம் மற்றும் வாராஹி பூஜை நடைபெற்றது, ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், சுமங்கலியாக இருக்கவும், மழை வேண்டியும், திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது.இந்த திருவிளக்கு பூஜையை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. வாராஹி அம்மன் பக்தி துதி பாடி ஆன்மீக சொற்பொழிவு உடன் திருவிளக்கு பூஜை தொடங்கப்பட்டது.இதில், நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு குங்குமம், மஞ்சள், பூ, தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை வைத்து திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, அம்மனுக்கு தீபாராதனைகள் நடந்தது. பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் சித்தர்பீட பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Similar News