ஒன்பது மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு
சிவகங்கையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் அக்., 18க்குள் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் பிற்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்படலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி ஆண்டிற்கு மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ள பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 படிக்கும் தமிழகத்தை சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும். பயன்பெற மாணவரது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்காக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பயனாளிகளாக தேர்வு செய்து, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 8 மற்றும் பத்தாம் வகுப்பில் 60 சதவீதமும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற அலைபேசி எண், ஆதார் கார்டில் உள்ள விபரங்களை https://scholarships.gov.in'' அல்லது மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையதளமான https://socialjustice.gov.in'' இணையதளத்தில் அக்., 18 க்குள் பதிவு செய்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.