சிவகங்கை ஆடு, நாட்டுக்கோழி விலை கிடு கிடு உயர்வு
சிவகங்கை தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி ஆடு, நாட்டுக்கோழி விலை உயர்ந்து காணப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வாரந்தோறும் நடைபெறும் ஆட்டு சந்தையில் மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, திருப்பாச்சேத்தி,பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இந்நிலையில் வருகிற 31ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் ஆடு, கோழிகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. வழக்கம்போல் ரூ.5 ஆயிரத்திற்கு விற்கப்படும் ஒரு ஆடு இந்த வாரம் ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதேபோன்று நாட்டுக்கோழி ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கூடுதலாக விற்பனையானது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி ஆடு மற்றும் கோழிகளின் விற்பனை அதிகரித்துள்ளதால் அவற்றின் விலையும் கூடுதலாகி வருகிறது. தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் விலை குறைய வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.