சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பட்டமளிப்பு விழா

மாணவ மாணவிகள் பங்கேற்றனர்

Update: 2024-07-28 07:10 GMT
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்து கல்லூரியின் சாதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார். தமிழக அரசின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கூடுதல் இயக்குனர் டாக்டர் சாந்தாராமன் கல்யாணராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் வருங்கால வேலைவாய்ப்புகள் குறித்தும், வருங்கால வளர்ச்சிக்கு தகுந்தவாறு வளர்த்து கொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும் பேசினார். மேலும் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மணிவண்ணன், மாணவ செயல்முறை பயிற்சி இயக்குனர் ஜெய்கர், மாணவ நல இயக்குனர் சண்முகசுந்தரம், தரவரிசை மற்றும் அங்கீகார பிரிவு இயக்குனர் ஸ்ரீதர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையை சேர்ந்த 346 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் 23 பேர் தங்க பதக்கங்களையும், 20 பேர் வெள்ளிப்பதக்கங்களையும், 17 பேர் வெண்கல பதக்கங்களையும் பெற்றனர். முடிவில், மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துறையின் அனைத்து பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Similar News