சேலம் அன்னதானப்பட்டியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட வாலிபர் பலி

போலீசார் விசாரணை

Update: 2024-07-28 07:14 GMT
சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜாபருல்லா (வயது 23), கூலித்தொழிலாளி. திருமணம் ஆகாத இவருக்கு மது அருந்துதல் மற்றும் போதை மருந்து பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வீட்டில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், ஜாபருல்லாவும், அவரது நண்பரும் சேர்ந்து போதை மருந்து ஊசி பயன்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. சம்பவத்தன்றும் ஜாபருல்லா போதை ஊசி செலுத்திக்கொண்டு, அதனால் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. அவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் முழு விவரங்கள் தெரியவரும். மேலும் இது தொடர்பாக அவரது நண்பரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News