கந்தர்வகோட்டை அருகே மின்மாற்றியை உடைத்து காப்பர் கம்பிகளை திருடி சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கந்தர்வகோட்டை அருகேயுள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மு. ராமதாஸ். இவர், தனக்கு சொந்தமான நிலத்திலுள்ள ஆழ்துளை கிணற்றுக்கு மின்வாரியத்தில் இருந்து சிறப்பு திட்டத்தில் பணம் செலுத்தி மும்முனை மின்சாரம் இணைப்பு பெற்று விவசாயம் செய்து வருகிறார். வியாழக்கிழமை இரவு மின் மோட்டாரை இயங்க வைத்துவிட்டுவியாழக்கிழமை இரவு மின் மோட்டாரை இயங்க வைத்துவிட்டு வெள்ளிக்கிழமை காலை வயலுக்கு சென்றபோது, அங்கிருந்த மின்மாற்றி உடைக்கப்பட்டு அதிலிருந்த காப்பர்கள் கம்பிகள், தகடுகள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து அவர், கந்தர்வகோட்டை மின்வாரிய அலுவலரிடம் புகார் அளித்தார். அண்மைக்காலமாக, இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கான மோட்டார்களின் மின்வயர்கள் அதிக அளவில் திருடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.