புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கெண்டையன்பட்டியில் ஆண்கள் மட்டுமே வழிபடக்கூடிய ஸ்ரீ.முத்து முனீஸ்வரர் கோயில் கிடா வெட்டு பூஜை 1000 கிலோ கறியுடன் 5000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சுடச்சுட கறி விருந்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கெண்டையன்பட்டி கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் ஸ்ரீ முத்து முனீஸ்வரர் கோயில் உள்ளது மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் இந்தக் கோயிலில் ஆண்கள் மட்டுமே வழிபாடு செய்யக்கூடிய கோயிலாகும் ஆண்டுதோறும் ஆடி மாதம் கிடா வெட்டு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான கிடா வெட்டு பூஜை நேற்று இரவு தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற பக்தர்கள் ஆடு, சேவல்களை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நிகழ்ச்சியின் முதலாவதாக ஸ்ரீ முத்து முனீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு கோயில் பரம்பரை பூசாரிகள் தீர்த்தம் கொடுத்தனர். அதன் பிறகு பக்தர்கள் அந்த தீர்த்தத்தை தெளித்து தாங்கள் கொண்டு வந்த ஆடு சேவல்களை நேர்த்திக்கடனாக பலியிட்டனர். கடந்த ஆண்டு தாங்கள் வேண்டிய நல்ல காரியங்கள் நிறைவேறியதால் பக்தர்கள் ஆடு சேவல்களை பலியிட காணிக்கையா கொடுத்தனர். அதனை தொடர்ந்து கோயில் பரம்பரை பூசாரிகள் சாமி ஆடியும் குறி சொல்லியும் உத்தரங்களுக்கு வாக்கு அளித்தனர். அதில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் விவசாயம் செழிக்கும் என்று கூறப்பட்டது. அதன் பின்னர் சாதம் வடித்தும் பலியிட்ட 1000 கிலோ ஆடுகளை சமைத்தும் விருந்துக்கான சமையல் தடல் புடலாய் நடைபெற்றது. அதன் பின்னர் சமைத்த உணவுகளை படையல் இட்டு தேங்காய் உடைத்து வழிபாடு செய்து வருகை தந்த பக்தர்களுக்கு சுடச்சுட கறி விருந்து வழங்கப்பட்டது. இதில் கெண்டயன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 5000கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று கறி விருந்து உண்டு மகிழ்ந்தனர். காலம் காலமாக வறட்சி இன்றி மக்கள் விவசாயத்தில் செழித்து வாழ கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கிடா வெட்டு பூஜை நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.