உலக சாதனை நிகழ்ச்சியில் விழுப்புரம் மாணவர்கள் சிலம்பத்தில் சாதனை

விழுப்புரம் பகுதி மாணவர்கள் சிலம்பத்தில் சாதனை

Update: 2024-07-29 01:34 GMT
உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்ட டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை மாணவர்கள், சிலம்பத்தில் சாதனை படைத்துள்ளனர்.பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ராயல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் வீர தமிழா தற்காப்பு கலை பயிற்சி மையம் இணைந்து உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த 1,௨00க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.இதில், சிலம்பம், கராத்தே, பரதம், யோகா உட்பட பல விளையாட்டுகள் நடைபெற்றது.இதில் விழுப்புரம் மாவட்ட டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இவர்கள், 33 நிமிடங்கள் இடைவெளியின்றி நிற்காமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு சான்றிதழ், பதக்கம், கோப்பை வழங்கப்பட்டது.உலக சாதனை நிகழ்ச்சி போட்டியில் பங்கேற்று சாதனை படைத்து விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள், டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை பயிற்சியாளர் அன்பரசியை இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

Similar News