தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்த பல்வேறு அமைப்பினருக்கு வருவாயத்துறை நேரம் ஒதுக்கீடு

சங்ககிரி: தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்த பல்வேறு அமைப்பினருக்கு வருவாயத்துறையின் சார்பில் நேரம் ஒதுக்கீடு....

Update: 2024-07-30 16:26 GMT
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 219வது நினைவு தினத்தினையொட்டி அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்துவதற்கான நேரம் வருவாய்துறையின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுந்ததிர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்ட நாளன்று அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றது.. அதனையடுத்து கடந்த 2015ம் ஆண்டு தமிழகரசின் சார்பில் சங்ககிரி அருகே உள்ள ஈரோடு}பவானி பரிவு சாலை அருகே தீரன்சின்னமலைக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 3ம் தேதி 219வது நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி சங்ககிரி வருவாய்துறையின் சார்பில் வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி தலைமையில் ஒவ்வொருவருக்கும் நேரம் மற்றும் புறப்படும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் 10 மணி வரை அரசு சார்பில் மலையடிவாரம் மற்றும் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மரியாதை செலுத்தப்பட உள்ளன. அதனையடுத்து காலை 10 மணி முதல் 10.45 மணி வரை அதிமுகவிற்கும், காலை 10.45 மணி முதல் 11.15 மணி வரை சங்ககிரி வட்டார கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம், கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பிற்கும், 11.15 மணி முதல் 11.45 மணி வரை தீரன்சின்னமலை கவுண்டர் பேரவைக்கும், 11.45 மணி முதல் 1.00 மணி வரை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவைக்கும், 1.00 மணி முதல் 1.30 மணி வரை அகில இந்திய மூவேந்தர் முன்னனி கழக்தினருக்கும், 1.30 மணி வரை 2.00 மணி வரை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கும், 2 மணி முதல் 2.30 மணி வரை பாமகவிற்க்கும், 2.30 மணி முதல் 2.45 மணி வரை தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்திற்கும், 3 மணி முதல் 3.30 மணி வரை பாஜகவிற்கும், 3.45 மணி முதல் 4.15 மணி வரை நாம் தமிழர் கட்சியினருக்கும், 5 மணி முதல் 5.15 மணி வரை தமிழக வெற்றிக்கழகத்திற்கும் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சங்ககிரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா, வட்டாட்சியர் வாசுகி, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர செல்வகுமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Similar News