பெரம்பலூரில் விபத்தை தடுத்து பணிப்பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமையில் பெரம்பலூர் நான்கு ரோடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஏற்படும் தொடர் மின்விபத்தை தடுத்து பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மின்விபத்திற்கு காரணமான காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், தரமான தளவாட பொருட்களை வழங்கிட வேண்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆட்குறைப்பு செய்யும் மின்வாரியம் மின்விபத்தை தடுத்திட தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும், கேங் மேன் பணியாளர்களுக்கு மேற்பார்வையாளர் இன்றி பணிகள் வழங்கப்படுவதை கைவிட வலியுறுத்தியும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.