திருச்செங்கோட்டில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்
திருச்செங்கோட்டில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களின் சார்பில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது ஏழை நடுத்தர மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மலை வழங்கப்படுவது நாசகார பட்ஜெட் என தலைப்பிட்டு மறியல் போராட்டம் நாடு முழுவதும்நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் உள்ள இந்தியன் வங்கி முன்புசாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது முன்னதாக பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சுகுமார் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராயப்பன்ஆகியோர் தலைமை வகித்தனர் ஒன்றிய செயலாளர்கள் பிஎஸ் முனுசாமி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு ஜெயராமன் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு ஜெயமணி ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினார்கள் . சிலை அருகில் இருந்து ஊர்வலமாக வந்து இந்தியன் வங்கி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருச்செங்கோடு நகர காவல் நிலைய போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். போராட்டத்தில்16 பெண்கள் உட்பட 87 பேர் கைது செய்யப்பட்டனர்.