ஜேடர்பாளையம் படுகை அனையில் திருச்சி மண்டல நீர்வளத்துறை அதிகாரி ஆய்வு.
பரமத்தி வேலூர் வட்டமு ஜேடர்பாளையம் படுகை அனையில் திருச்சி மண்டல நீர்வளத்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டனர்.
பரமத்திவேலூர், ஆகஸ்ட்.,2: பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் படுகை அணைக்கட்டு பகுதியில் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வேலூர்,அணிச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் நாமக்கல் உதவி ஆணையாளர் (கலால்) பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை முழு கொள்ளவையும் எட்டியதால் உபரி நீர் முழுமையாக திறக்ப்பட்டுள்ளது. பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் படுகை அணைகட்டு பகுதி மற்றும் பரமத்தி வேலூர் தாலுகாவில் உள்ள காவிரி கரையோர பகுதிகளில் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார், கண்காணிப்பு பொறியாளர் ராமலிங்கம்,சேலம் மண்டல செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனரா, எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வினோத்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.