திருச்செங்கோடு உரக்கிடங்கை எம்எல்ஏ திடீர் ஆய்வு
திருச்செங்கோடு உரக்கிடங்கை எம்எல்ஏ திடீர் ஆய்வு
திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளைச் சேர்ந்த குப்பைகளை கொட்டி பிரித்து உரமாக்கும் பணிக்காக அணிவூரில் நகராட்சி குப்பை கிடங்கு மற்றும் உரக்கடங்கு கடந்த 20 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது.அதில் குப்பையில் தேங்கியதால் தங்களது பகுதி கிணறுகள் ஆழ்துளை கிணறுகள் குடிதண்ணீர் ஆகிய பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பரவி குடியிருக்க முடியாத அளவுக்கு ஆகிவிட்டதாக பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி ஒரு முறை தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தி பல்வேறு அரசியல் கட்சியினரும் குப்பை கிடங்கை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி அளித்திருந்த நிலையில் புதிய குப்பைகள் கொட்டப்படாது எனவும் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகள் விரைந்து அளிக்கப்படும் எனவும் தற்போதைய நகராட்சி நிர்வாகம் அறிவித்து பணிகளை வேகமாக முடுக்கிவிட்டது. இதற்காக பெரிய எந்திரங்கள் வாங்கப்பட்டு இரண்டு பெரிய எந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன இவை தினமும் சராசரி 15 டன்னுக்கு மேற்பட்ட குப்பைகளைமக்கும் மக்காத குப்பைகளாக பிரித்து பிளாஸ்டிக் , துணிகள் இவற்றை தனியாக பிரித்து மீதமுள்ளவற்றை அரைத்து உரமாக்கி கொடுக்கிறது.இதன் காரணமாக மலை போல் தேங்கி இருந்தகுப்பைகள் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அணிமுர் உரக்கிடங்கை நேரில் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் சேகர்,பொறியாளர் சரவணன், துப்புரவு அலுவலர் வெங்கடாசலம்,அணிமூர் ஊராட்சி தலைவர் தாமரைச்செல்வன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ஒன்றிய திமுக துணைச் செயலாளர் ராஜபாண்டி ராஜவேல் உடன் இருந்தனர்.எந்திரத்தின் பணிகளை பார்வையிட்ட திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தினமும் எவ்வளவு குப்பைகளை தூய்மைப்படுத்துகிறது உரமாக்குகிறது எனவும் அதிலிருந்து பிரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் எங்கு அனுப்பப்படுகிறது அது என்னவாக பயன்படுகிறது என்பது குறித்தும், நகராட்சி ஆணையாளரிடம் கேட்டறிந்தார்.மேலும் தினசரி அந்த எந்திரங்கள் இயங்கும் நேரம் எவ்வளவு? எவ்வளவு குப்பைகளை அவை அழைக்கின்றன என்பது குறித்து தினசரி பதிவேடு ஒன்றை பராமரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.முன்னதாக சாணார்பாளையம் பகுதியில் தினமும் வரும் குப்பைகளை அரைக்க தரம் பிரிக்க உரமாக்க இன்னும் ஒரு பெரிய இயந்திரம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் அந்தப் பகுதியை சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு செய்தார்.