ஜவ்வாது மலை கிராமங்களில் சுற்றி திரியும் ஒற்றை கொம்பன் யானை!
கோவிலூர் பகுதியில் சுற்றித் திறிந்த ஒற்றை கொம்பன் யானை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!
திருப்பத்தூர் மாவட்டம் கோவிலூர் பகுதியில் சுற்றித் திறிந்த ஒற்றை கொம்பன் யானை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்! திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு அடுத்த கோவிலூர் பகுதியில் ஒற்றை கொம்பன் யானை சாலை மற்றும் விலை நிலங்களில் சுற்றி திரிந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளனர். இந்த நிலையில் அப்பகுதியில் இருந்து அரந்த காட்டுக்குள் யானை சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளன அதனை தொடர்ந்து இந்த சம்பவம் அறிந்த வனத்துறையினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் யானையை காட்டுக்குள் அனுப்பும் முயற்சியிலும் ஈடுபட்டதாகவும் தற்போது அடர்ந்த காட்டுக்குள் ஒற்றை கொம்பன் யானை சென்று விட்டதாகவும் தகவல் தெரிவித்தனர் என்று குறிப்பிடத்தக்கது