வளர்ச்சி திட்ட பணிகள் வெள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் ஆசியா மரியம், வளர்ச்சித்திட்ட பணிகள், வெள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-08-02 13:19 GMT
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஆசியா மரியம், , மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் முன்னிலையில் மேட்டூர் அணையில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதை அடுத்து காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்தும், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், சிலுவம்பட்டி ஊராட்சி, பொரசப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை, பட்டியல் படி உணவு வழங்கப்படுகிறதா, உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பள்ளியில் குழந்தைகளின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார். சேந்தமங்கலம் சாலை பள்ளிவாசலில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகை தரும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கபடும் உணவு, குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை, உயரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளிவாசலில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி, அரசம்பாளையம் சமுதாயக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அரசம்பாளையத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள இடங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஜேடர்பாளையம், அணைகட்டு பகுதியில் தலைமை நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பரமத்தி வேலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் பள்ளி சீருடைகள் வழங்கி, பள்ளியில் மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மேலும், வடகரை ஆத்தூர் ஊராட்சி, ஆனங்கூரில், மகளிர் சுய உதவிக்குழுவினரின் நடத்தி வரும் அங்காடியை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அரசின் சார்பில் பெறப்பட்ட கடனுதவி மற்றும் மானியம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். பரமத்தி வேலூர் ஊராட்சி ஒன்றியம், அனிச்சம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஒருவந்தூர் ஊராட்சி, பாவடி தெருவில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும், பயனாளிகளிடம் வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட ஆணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மோகனூர் ஊராட்சி ஒன்றியம், லத்துவாடியில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டும் பணியினை நாமக்கல் ஆசியா மரியம், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Similar News