புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம் பி ஆய்வு..
நாமக்கல் நகராட்சி, புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அவர்கள் ஆய்வு
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் இன்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அவர்கள் நாமக்கல் நகராட்சியில், புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை ( பழைய அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில்) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் ரூ. 44 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு புணரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பொதுமக்கள் சிகிச்சை பெற்று நிலையில் மேலும் உட்கட்ட அமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு என்றென்றும் பொது மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என பாராளுமன்ற மாநிலங்களை உறுப்பினர் அவர்கள் தெரிவித்துள்ளார்.