மோட்ச தீபத்தை காண காவிரி பாலத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள்.
பரமத்தி வேலூரில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு மோட்ச தீபம் விடப்பட்டது. தீபத்தை காண காவிரி பாலத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்.
பரமத்தி வேலூர்,.4: பரமத்தி வேலூரில் ஆடி பண்டிகை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து மோட்ச தீபம் கொண்டு சென்று ஆண்டு தோறும் காவிரி ஆற்றில் விடுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் கோவிலில் இருந்து மோட்ச தீபத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மேளதாளத்துடன் கோவிலில் இருந்து ஊர்வலமாக ஆற்றில் விடப்பட்டது. இந்த மோட்ச தீபத்தை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றிற்கு வந்திருந்தனர். தண்ணீர் அதிக அளவில் செல்வதால் காசி விஸவநாதர் கோயில் கரையோரத்தில் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால் பரமத்தி வேலூர் காவிரி பாலத்தில் இருந்து மோட்ச தீபத்தை பார்க்க ஏராளமக்கள் குவிந்தனர். காவிரி ஆற்றில் விடப்பட்ட மோட்ச தீபத்தை காவிரி பாலத்தில் இருந்து ஆர்வமுடம் பார்த்து வணங்கி சென்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் பாலத்தில் குவிந்ததால் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காவிரி பாலத்தில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சீர் செய்தனர்.