ராமநாதபுரம் ஆடி அமாவாசை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது

ஆடி அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் சிவ ஸ்ரீ அனந்த நாராயண குருஜியின் ஆசிகளுடன் துர்கா அன்னதான சேவை குழுவினரால் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. துர்கா அன்னதான சேவை குழுவினர்கள் ஜோதிடர்கள் சக்திவேல், சிவக்குமார் ஆகியோர் வழங்கினர்.

Update: 2024-08-04 10:47 GMT
ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் அம்மாவாசை நாள்களில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்தால் மோட்சம் என்ற ஐதீகம் உள்ளது இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் வந்திருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு தம்மோடு வாழ்ந்து பிறந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்து வருகின்றனர் பின்னர் கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி விட்டு சாமி மற்றும் அம்பாளை தரிசனம் பெற்று செல்கின்றனர் இதனைத் தொடர்ந்து சிவ ஸ்ரீ அனந்த நாராயண குருஜியின் ஆசிகளுடன் துர்கா அன்னதான சேவை குழுவினரால் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. துர்கா அன்னதான சேவை குழுவினர்கள் ஜோதிடர்கள் சக்திவேல், சிவக்குமார் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Similar News