நல்லூர் அருகே தொழில் நஷ்டம் லாரி அதிபர் தற்கொலை.

நல்லூர் அருகே தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் லாரி அதிபர் தற்கொலை நல்லூர் காவல் துறையினர் விசாரணை.

Update: 2024-08-04 14:21 GMT
பரமத்தி வேலூர்,:5- பரமத்தி வேலூர் வட்டம் வசந்தபுரம் அருகே உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர் 4 லாரிகளை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். லாரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் சுமை அதிமாகி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை அதிகாலை 2 மணியளவில் தனது வீட்டில் இருந்த பிரபு வாந்தி எடுத்தளார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் கேட்டபோது தான் தற்கொலை செய்து கொள்வதற்காக தென்னை மரத்து மாத்திரை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். அதை கேட்ட அவர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரபுவை உடனடியாக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவமைக்கு கொண்டு வந்த பிரபுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரபு ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த நல்லூர் காவல்துறையினர் பிரபுவின் உடலை கைபற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமையில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி அதிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News