ராமநாதபுரம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலக கைது

கமுதி வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது

Update: 2024-08-06 11:56 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் A.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் சொந்தமாக செங்கல் சூளை தொழில் நடத்தி வருகிறார். இவர் தனது தகப்பனார் அங்குச்சாமி பெயரில் உள்ளதை ஒப்பந்தம் உரிமம் பெறுவதற்காக கமுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனு கொடுத்துள்ளார். அது சம்பந்தமாக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை 11.07.2024 ஆம் தேதி கமுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கட்டியுள்ளார். மேலும் இதுசம்மந்தமாக அலுவலகம் சென்று மேலாளர் இராமசந்திரனிடம் கேட்ட போது சான்றிதழ் சம்மந்தமாக தீர்மானம் போட்டாச்சு எனவும் ரூ.20000 எனக்கும், அலுவலகச் செலவிற்கும் கொடுத்துவிட்டு வாங்கிகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.. அதற்கு செந்தில்குமார் அரசுக்கு கட்ட வேண்டிய தொகையை கட்டிவிட்டேன் பிறகு எதற்கு நான் அவ்வளவு தொகை கொடுக்கனும் என கேட்டதற்கு மேலாளர் ரூ.12000/- கொடுங்க இல்லைனா வேலை நடக்காது என்றும், அதனை இன்று மாலைக்குள் கொண்டு வந்து தந்துவிட்டால் வேலையை முடித்து சான்றிதழ் பெற்று விடலாம் என்றும் , இல்லையென்றால் சான்றிதழ் கிடைக்காது என்றும் கராறாக தெரிவித்துள்ளார். இதை கேட்ட செந்தில்குமார் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸிடம் புகார் அளித்துள்ளார். புகாரி அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை போலிஸார் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளனர். அதனைப் பெற்று மேலாளர் ராமச்சந்திரனிடம் ரூ.12000/- லஞ்சமாக கொடுக்கும் பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News