ராமநாதபுரம் விதை நெல் வழங்கும் விழா நடைபெற்றது

உத்திரகோசமங்கை கிராமத்தில் நெல் விதைகள் வழங்கும் விழா

Update: 2024-08-06 11:58 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட உத்திரகோசமங்கை கிராமத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 50 சதவீதம் மானிய விலையில் நெல் விதைகள் வழங்கபட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு 115 நாள் ஏடிடி(ஆர்) 45 ரகம் நெல், 115 நாள் கோ-51 ரகம் , 125 நாள் என் எல் ஆர் ரகம், 120 நாள் ஆர் என் ஆர் ரகம் ஆகிய நெல் சான்று விதைகளை வேளாண்மை உதவி இயக்குநர் பி. செல்வம் வழங்கினார். மேலும் திருப்புல்லாணி வட்டாரத்தில் என் எல் ஆர் 15.35 மெட்ரிக் டன், கோ-51-15.95 மெட்ரிக் டன், ஆர் என் ஆர் - 6.6 மெட்ரிக் டன், எடிடி 45 4.25 மெட்ரிக் டன், எடிடி 36- 2.45 மெட்ரிக் டன். மொத்தம் 44.600 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் சான்று விதைகளை வாங்கி விவசாயிகள் பயனடைய என வேளாண்மை உதவி இயக்குநர் செல்வம் தெரிவித்துள்ளார்

Similar News